கன்னியாகுமரி

முந்திரிக்கு உற்பத்தி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு மனு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரிக்கு விளைபொருளுக்கான வரி விதிக்கக் கூடாது எனக் கோரி, தமிழ்நாடு முந்திரி தொழிற்சாலை

DIN

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரிக்கு விளைபொருளுக்கான வரி விதிக்கக் கூடாது எனக் கோரி, தமிழ்நாடு முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் முன்னேற்ற சங்கம் சார்பில்  தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து,  தமிழ்நாடு முந்திரி தொழிற்சாலை உரிமையாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ஜெயச்சந்திரன் தலைமையில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முந்திரி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.  குமரி மாவட்டத்தில் முந்திரி விளைச்சல் குறிப்பிட்ட அளவு இல்லை.  அதிலும் தமிழகத்தில் முந்திரி விவசாயம் பெரும்பாலும் நசிந்து விட்டது.  இதனால் நைஜீரியா  உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து முந்திரி இறக்குமதி செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் முந்திரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்படுகிறது.  இருப்பினும் இதனுடன் முந்திரி விளைச்சலுக்கான ஒரு சதவீதம் வரியை தமிழக அரசு விதித்து வருகிறது.  இறக்குமதி செய்யும் முந்திரிக்கு விளைபொருளுக்கான ஒரு சதவீத வரி விதிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT