மங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது
குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து திருவிழா ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச கவ்ய அபிஷேகம், களபாபிஷேகம், நவகலச அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அலங்கார தீபாராதனையும், அத்தாழ பூஜையும் நடைபெற்றது. இக்கோயிலில் 2 ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை மாலையில் அம்மன் யானை மீது எழுந்தருளல் நடைபெறுகிறது. 4 ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை நாகரூட்டு நடைபெறுகிறது.
நிறைவு நாளான மார்ச் 5 ஆம் தேதி காலையில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து நேர்ச்சைகளும், மாலையில் ஆறாட்டு கலசபூஜையும், ஆறாட்டும் நடைபெறுகிறது.