கன்னியாகுமரி

கோட்டாறு சாலையில் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு

DIN


நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையச்  சாலையில் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து நாகர்கோவில் சார் ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நாகர்கோவில் சந்திப்பு 
ரயில் நிலையத்தில் இருந்து முதலியார் தெரு வழியாக நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலை (கேப் ரோடு) சந்திப்பு வரையிலான பிரதானச் சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொது அமைதியின்மை, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு இச்சாலையில் இரவு 10  மணி முதல் காலை 6 மணி வரையிலும், நண்பகல் 12  மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மட்டும் கனரக வாகனங்களில் சரக்கு ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு  திங்கள்கிழமை (ஆக.19) காலை 5 மணி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

ஈரான் - இஸ்ரேல் பரஸ்பர குற்றச்சாட்டு!

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

SCROLL FOR NEXT