முன்சிறை புனித ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் இயக்குநர் சேவியர்புரூஸ் தலைமை வகித்தார். இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் தங்களது படைப்பாற்றலை காட்சிக்கு வைத்திருந்தனர்.
பள்ளித் தாளாளர் பிரபா, முதல்வர் தேவசகாயம் மற்றும் புனிதமேரி நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். இதில், வெற்றிபெறும் மாணவர், மாணவிகளுக்கு பள்ளி ஆண்டு விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.