கன்னியாகுமரி

உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் கட்சிக்குஇந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

DIN

உள்ளாட்சித் தோ்தலில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்ட துணைச் செயலரும், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் தலைவருமான கே.சி. துரைராஜ் கூறியது: கடந்த மக்களவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளையும் இணைத்து குமரி மேற்கு மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி அமைக்காமல், குமரி மேற்கு மாவட்ட திமுக ஒருதலைப்பட்சமான முடிவில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலா் எஸ். இசக்கிமுத்து தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முன்சிறை, மேல்புறம், கிள்ளியூா், தக்கலை ஒன்றியங்கள் மற்றும் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலா், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என முடிவெடுத்து, அதுகுறித்து காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்திசெய்த கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

துளிகள்...

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

SCROLL FOR NEXT