கன்னியாகுமரி

குமரிக் கண்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: சுதா சேஷய்யன்

DIN

கடலில் மூழ்கிய குமரிக் கண்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும் என்றார் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன்.
நாகர்கோவில் ராஜகோகிலா அறக்கட்டளையின் தென்குமரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் "பன்முகப் பார்வையில் குமரிக் கண்டம்' எனும் தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிற்கு அறக்கட்டளைத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். 
கருத்தரங்கில், சுதா சேஷய்யன் பேசியது: தமிழகத்தில் குமரிக் கண்டம் முற்காலத்தில் இருந்தது. அதில், பெரும்பாலான நிலப்பரப்புகள் கடலில் மூழ்கிவிட்டன. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.   மூழ்கிப் போன குமரிக்கண்டத்தில் அரிய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. 
இதனை உறுதி செய்ய குமரிக் கண்டம் தொடர்பான கடல் ஆய்வுப்பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட வேண்டும்.  ஆராய்ச்சியினால் பண்டைய தமிழர்களின் நாகரிகம், தொன்மை உள்ளிட்ட வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும். இது தமிழுக்கும், தமிழகத்துக்கும் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமையும். ஆகவே, குமரிக் கண்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார் அவர்.
கருத்தரங்கில், ஒருங்கிணைந்த பெருங்கடல் சார் பண்பாட்டு நடுவம் தலைவர்  ஒரிசா பாலு பேசுகையில், குமரிக் கண்டம் குறித்து  ஆய்வு மேற்கொண்டதில் ஒரு தீவு உள்ளிட்ட 15 இடங்கள் குமரி கடல் பகுதியில் மூழ்கி உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.  
கருத்தரங்கில், "ஆவணங்களில் குமரிக் கண்டம்' எனும் தலைப்பில்  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுவடியியல் அரிய கையெழுத்துத்துறை இணைப்பேராசிரியர் ஆதித்தன்,  "நாட்டுப்புற பாடல்களில் குமரிக்கண்டம்' எனும் தலைப்பில் சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன துணைத் தலைவர் தசரதன்,  "இக்கால இலக்கியங்களில் குமரிக் கண்டம்' எனும் தலைப்பில் சென்னை மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவன முகிலை ராசபாண்டியன், "தமிழ் இதழ்களில் குமரிக் கண்டம்' எனும் தலைப்பில் பேராசிரியை லக்குமி, "குமரி கண்டமும்- கன்னியாகுமரி மாவட்டமும்'  எனும் தலைப்பில் மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் பத்மநாபன், "சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டம்' எனும் தலைப்பில் பேராசிரியை கலைமகள் ஆகியோர் பேசினர்.
ராஜம் சந்திரஹாசன் குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியினை கீழப்பாவூர் சண்முகையா தொகுத்து வழங்கினார். அறக்கட்டளை துணைத்தலைவர் அனுசுயாசெல்வி வரவேற்றார். தணிகைகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT