கன்னியாகுமரி

குமரியில் இருந்து மயிலாடிக்கு காமராஜர் ஜோதி யாத்திரை

DIN

காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரிகாமராஜர் மணி மண்டபத்தில் இருந்து மயிலாடிக்கு ஜோதி யாத்திரை திங்கள்கிழமை புறப்பட்டது.
 மயிலாடி காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் தொடங்கிய இந்த யாத்திரையை மாநில பாஜக தொழில்பிரிவு துணைத்தலைவர் ஏ.ராஜா தொடங்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என்.செந்தில் முன்னிலை வகித்தார். இந்த யாத்திரை அஞ்சுகிராமம், அழகப்பபுரம் வழியாக மயிலாடி சென்றடைந்தது.
இதில், தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கத் தலைவர் ஆர்.ஆர்.சிங்நாடார், காமராஜர் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் சாலிபாண்டியன், தமிழ்நாடு நாடார் பேரவையின் அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மின்னொளி கபடிப் போட்டிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT