கன்னியாகுமரி

புதுக்கடை  அருகே  பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

புதுக்கடை  அருகே உள்ள கீழ்குளம் தனியார் மருத்துவமனையில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் மனைவி ரபேக்காள்(59). இவர் உடல்நலக்குறைவால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,  வியாழக்கிழமை மருந்துவமனை வளாகத்தில் ரபேக்காள் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த  3 பவுன் சங்கிலியை  பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.  இது குறித்து, புகாரின் பேரில் புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரும் அச்சப்பட வேண்டாம்: பெரிய திட்டங்களுடன் 3-வது முறை ஆட்சி -பிரதமர் மோடி

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

பாயும் ஒளி நீ எனக்கு...

SCROLL FOR NEXT