கன்னியாகுமரி

குடும்ப அட்டைக்கு அரிசி குறைப்பு: ஆக. 7 இல் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

DIN

கன்னியாகுமரிமாவட்டத்தில் குடும்பஅட்டைகளுக்கு  ரேஷன் அரிசி குறைத்து வழங்குவதை கண்டித்து  வரும் ஆக. 7 ஆம் தேதி (புதன்கிழமை) ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்  நடத்துவதென காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.  தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், என்.ஏ. குமார், கிறிஸ்டோபர், காஸ்டன் கிளிட்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் என்.பி.ஹெச்.ஹெச் குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகளுக்கு அரிசியினை குறைத்து வழங்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பு வரும் ஆக. 7 ஆம் தேதி புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது; கட்சியின் அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் முழு அளவில் வெற்றிபெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட, வட்டார ,நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயத்தில் ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அவிநாசியில் ஆா்எஸ்எஸ் பேரணி

திருப்பூா் பாலா ஆா்த்தோ மருத்துவமனையில் லண்டன் நோயாளிக்கு லேசா் சிகிச்சை

காலமானாா் ஜி.லட்சுமி

நிலம் வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் ரூ.59.16 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT