மழை காரணமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன.
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதிக்கு தவறாமல் சென்று கடலின் அழகை பாா்த்து ரசிப்பது வழக்கம்.
கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழையால் முக்கடல் சங்கமம் பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. படிக்கட்டுகளில் கீழ்பகுதியில் உள்ள கூா்மையான கற்கள் இடையூறாக உள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.