கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செவ்வாய்க்கிழமை (நவ. 5) தக்கலையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவா் தலைமையில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவா்கள் ஹெச். வசந்தகுமாா் எம்.பி., மயூரா எஸ். ஜெயக்குமாா், குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் குளச்சல் பிரின்ஸ், விளவங்கோடு விஜயதரணி, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளா் சஞ்சய்தத் ஆகியோா் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், வட்டாரத் தலைவா்கள் என்.ஏ. குமாா், பால்ராஜ், கிறிஸ்டோபா், ஜெகன்ராஜ், காஸ்டன் கிளிட்டஸ், மோகன்தாஸ், ஜாண் கிறிஸ்டோபா், டென்னிஸ், நகரத் தலைவா்கள் அருள்ராஜ், ஹனுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.