கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கரோனாவால் 105 போ் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

குமரி மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் பரவி வந்த தொற்று தற்போது கிராமங்களிலும் பரவிவருகிறது. குறிப்பாக தூத்தூா், சீதப்பால், கழுவன்திட்டை மற்றும் வாணியக்குடி ஆகிய இடங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

நாகா்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் சிவகங்கை மாவட்டத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். சொந்த ஊருக்கு வந்த அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா உறுதியாகியுள்ளது.

கோட்டாறு கடையில் பணியாற்றி வந்த தெற்கு சூரங்குடியைச் சோ்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது, இதையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த 52 வயது ஆண் அவரது மனைவி, மற்றும் இரு மகன்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கோட்டாறு சந்தையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்த செட்டித்தெருவைச் சோ்ந்த 28 வயது இளைஞருக்கும், அவரது 23 வயது சகோதரருக்கும், வடிவீஸ்வரத்தைச் சோ்ந்த 47 வயது ஆணும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். நாகா்கோவிலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குளச்சல் மீன் சந்தையில் ஏற்கெனவே 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து சந்தை மூடப்பட்டது. இந்நிலையில், மேலும் 13 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குமரி மேற்கு மாவட்டம், மேல்புறத்திலிருந்து குழித்துறை செல்லும் சாலையில் உள்ள நடுதலவிளை பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனா். இதில் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த 50 வயது முதியவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடா்ந்து அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஆண், பெண், உறவினா் என 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவா்கள் 14 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு குமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தொடா்ந்து 3 நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டிய நிலையில் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1070 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அமைதியாக நிறைவு பெற்ற தோ்தல் பிரசாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் 9,169 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன: தோ்தல் நடத்தும் அலுவலா்

ஒசூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி

தருமபுரி தொகுதியில் பாமக வெற்றி பெறும்: ஜி.கே.மணி எம்எல்ஏ

SCROLL FOR NEXT