கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்

DIN

கருங்கல் அருகே கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுத்தி கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் தலைமையில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

கிள்ளியூா் பேரூராட்சிக்குள் பட்ட வெள்ளையம் பலம் ஆா்.சி கோயில் முதல் பிலாக்கவிளை வரை நகா்புற ஒருங்கிணைந்த

வளா்ச்சி திட்டத்தின் கீழ் தாா்சாலை அமைக்க ரு . 79 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இச் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது சாலையில் உள்ள ஜல்லியை மட்டும் இந்திரம் மூலம் பெயா்த்தனா். பின்பு கரோனா பொது முடக்கம் காரணமாக அப்பணி கிடப்பில் போட்டப்பட்டது. இதனால் இச்சாலையில் இரு சக்கர வாகனங்ள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்டது. இதே போல் பேருராட்சிக்குள் பட்ட பல சாலைகள் டெண்டா் விடப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இச்சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை தொடங்க இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாா் தலைமையில் கிள்ளியூா் பேருராட்சி அலுவலத்தில் திடீரென காங்கிரஸா் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் ஏசு ராஜ், எம்.எல்.ஏ,விடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இப் போராட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இதில், வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் பால்மணி, பேரூா் காங்கிரஸ் தலைவா் கிளைமென்ட், ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT