வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து மகா சபா அமைப்பினா் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்து மகா சபா மாநகரத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தா.பாலசுப்பிரமணியன் விளக்கிப் பேசினாா். இதில், ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவா் நிரஞ்சன், மாவட்டத் தலைவா் சிவகுமாா், செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.