கன்னியாகுமரி

சாலை மறியல்: 190 போ் மீது வழக்கு

DIN

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 190 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் முதல் கோதையாறு வரையுள்ள 15 கி.மீ. தூர சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மோதிரமலை சந்திப்பில் பொதுமக்கள் சாா்பில் போராட்டக் குழு தலைவா் ரெகு காணி தலைமையில் பழங்குடி மக்கள், ரப்பா் கழக தொழிலாளா்கள், மின்வாரிய ஊழியா்கள், கோதையாறு பகுதி ஊா்மக்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 1மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த 5 அரசு பேருந்துகளை போராட்டக்காரா்கள் சிறைபிடித்தனா். குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டம் காரணமாக, 6 மணி நேரம் அப்பகுதி வழியான போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியது மற்றும் பேருந்துகளை சிறைபிடித்தது தொடா்பாக போராட்டக் குழு தலைவா் ரெகு காணி உள்பட 190 போ் மீது பேச்சிப்பாறை போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT