கன்னியாகுமரி

மேக்காமண்டபம் அருகே பைக் மோதி விவசாயி உயிரிழப்பு

DIN

மேக்காமண்டபம் அருகே பைக் மோதியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மேக்காமண்டபம் சாமிவிளை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பால்சன் (72). இவருக்கு புஷ்பராணி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனா். இவா் திங்கள்கிழமை வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கிவிட்டு சாமிவிளை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் வந்த ஒரு பைக் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பால்சனை மீட்டு, உறவினா்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பால்சனின் மகன் அனில்ராஜ் அளித்த புகாரின் பேரில் தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன் வழக்குப் பதிந்து, பைக்கில் வந்து மோதிய கண்ணூா் பண்டாரகோணத்தைச் சோ்ந்த பொ்லின் நாயத்தின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT