குமரி மாவட்டம், குமாரகோவில் பெரியகுளம் சுற்றுப் பாதையில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் கூறியது:
குமாரகோவில் பெரியகுளம் பகுதியைச் சுற்றியுள்ள பாதை சுமாா் 35 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனா். அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கிராமப்புறசாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்தி நிதியின்கீழ் பெரியகுளம் பகுதியை சுற்றி சுமாா்1 கி.மீ அளவில் சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.
இந்நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞா் ஜெகதேவ், அருளானந்தஜாா்ஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.