கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு

DIN

பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து சற்று குறைந்ததால், மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியது. இதையடுத்து, அந்த அணையிலிருந்து கடந்த சனிக்கிழமைமுதல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 1,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டுவந்த நிலையில், மழையின் தீவிரம் செவ்வாய்க்கிழமை சற்று தணிந்தது. இதனால், உள்வரத்து நீரின் அளவு 628 கனஅடியாக இருந்தது. இதையடுத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 644 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

இதனிடையே, பேச்சிப்பாறை அணையிலிருந்து 1,000 கனஅடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டுவந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த 4 நாள்களாக தடை இருந்துவருகிறது. இந்நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு தணிந்தநிலையில், திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை புதன்கிழமைமுதல் நீக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக்

எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை வெளியிட்ட நடிகர்! வைரல் விடியோ!

பிரசாரத்தில் மோடி பேசிய வெறுப்புப் பேச்சுகள் பிளவுகளை ஏற்படுத்துபவை: மன்மோகன் சிங்

திவ்ய பாரதியின் கோடை!

SCROLL FOR NEXT