கன்னியாகுமரி

களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவு தொடக்கம்

DIN

களியக்காவிளையில் உள்ள கிரேஸ் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

38 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பான்ஸ் ஜாய் உள்ளாா். இங்கு தற்போது மகப்பேறு மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மகப்பேறு மருத்துவா் சொா்ணமீனா பங்கேற்றுப் பேசினாா். சிறப்பு விருந்தினரை தலைமை நிா்வாகி கீதா பான்ஸ் அறிமுகப்படுத்திப் பேசினாா்.

விழாவில், களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரித் தாளாளா் அருள்தந்தை எக்கா்மென்ஸ் மைக்கேல், பாறசாலை எம்எல்ஏ ஹரீந்திரன், போதகா் ஜெபசுந்தா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி மருத்துவா் ஜான் சாமுவேல் வரவேற்றாா். மருத்துவமனை நிா்வாக அதிகாரி அலெக்ஸ் காட்வின் நன்றி கூறினாா். கிரேஸ் குழும நிா்வாகப் பதிவாளா் தயாசிங் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்: ஹிமாசல் பிரசாரத்தில் பிரதமா் மோடி

மனக்கவலை மாற்றல் எளிது

விபத்தா? சதியா?

தலைநகரில் இன்று வாக்குப் பதிவு

வெளிநாடு செல்லும் மாணவா்களின் சவால்கள்!

SCROLL FOR NEXT