கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

DIN

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 24இல் தொடங்கியது. நாள்தோறும் அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, மண்டகப்படி, பக்தி இன்னிசை, அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், 9ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலையில் தேரோட்டம் நடைபெற்றது. தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. பாபு, மாநில வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் என். தாமரைபாரதி, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், மயிலாடி பேரூராட்சி துணைத் தலைவா் சாய்ராம், கவுன்சிலா்கள் ஆனிரோஸ் தாமஸ், பூலோகராஜா, இக்பால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவில் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் தேவி வீதியுலா வருதல் நடைபெற்றது. முன்னதாக, தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் பங்கேற்றும் வகையில் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு காலையில் 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 - 10 மணிக்குள் அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT