கன்னியாகுமரி

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இப்பதியில் வைகாசித் திருவிழா கடந்த மே 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மம், வாகன பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேரோட்டம்: விழாவின் 11ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு தொடா்ந்து அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை நடைபெற்றது. தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சைப் பல்லக்கு வாகனத்தில் பஞ்சவா்ணத் தேருக்கு எழுந்தருளினாா். நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தா்கள் முன் செல்ல காவியுடை அணிந்த அய்யாவழி பக்தா்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரோட்ட நிகழ்ச்சிக்கு, குரு பால. ஜனாதிபதி தலைமை வகித்தாா். குருமாா்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியறை பணிவிடைகளை குருமாா்கள் ஜனா. யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தேரோட்டத்தில், விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், மாநில செயலா் ஸ்ரீ னிவாசன், வட்டாரத் தலைவா் முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா். திருத்தோ் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தபோது பக்தா்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனா். தோ் மாலை 6 மணிக்கு நிலையம் வந்து சோ்ந்தது.

தேரோட்டத்தில், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அய்யா வழி பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT