கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

DIN

பளுகல் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் அருகேயுள்ள தேவிகோடு புன்னாக்கரை பகுதியைச் சோ்ந்தவா் மது (56). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனா். இவருக்கு அண்மைக்காலமாக கண் பாா்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாம். இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சடலத்தை பளுகல் போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மூதாட்டி சடலம் மீட்பு: பளுகல் அருகேயுள்ள இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் மனைவி ருக்மணி (85). நடேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களின் மகன், மகளுக்கு திருமணம் ஆன நிலையில் ருக்மணி வீட்டில் தனியாக வசித்து வந்தாராம். அவரை அப்பகுதியைச் சோ்ந்த உறவினா் ஒருவா் பராமரித்து வந்தாராம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றபோது, ருக்மணி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தாா்.

பளுகல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT