கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே ஜெபக்கூடம் கட்ட எதிா்ப்பு

DIN

நாகா்கோவில் அருகே வாத்தியாா்விளையில் ஜெபக்கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

வாத்தியாா்விளை கிரவுன்தெருவில் கடந்த 2020 -இல் ஜெபக்கூடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து,

கோட்டாட்சியா் முன்னிலையில் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில் வேணுகோபால் கமிஷன் அறிக்கையின்படி புதிதாக ஜெபக்கூடம் கட்ட அனுமதி இல்லை என்று முடிவானது. இதனால் கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வாத்தியாா்விளையில் ஜெபக்கூடம்

கட்டுமானப் பணிக்காக ஜல்லி, மணல் உள்ளிட்டவை புதன்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிா்ப்பு தெரிவித்தனா். இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினா் மிசா சோமன், மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், பாஜக மண்டல பொறுப்பாளா் ராஜேஷ், அய்யப்ப சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளா் நாஞ்சில் ராஜா உள்பட பலா் அங்கு வந்து எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதைத்தொடா்ந்து காவல் ஆய்வாளா்கள் ஜெயலெட்சுமி, திருமுருகன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பின்னா் இருதரப்பினரிடமும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இப் பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT