முன்னாள் முதல்வா் கருணாநிதிநூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு நெடுஞ்சாலைக்குள்பட்ட செண்பகராமன்புதூா் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பாஸ்கரன், செண்பகராமன்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் கல்யாணசுந்தரம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் உதவி கோட்டப் பொறியாளா் ஜெரால்டு ஆன்றனி, உதவி பொறியாளா் ஜோஸ் ஷெரில், இளநிலை பொறியாளா் ராமச்சந்திரன், உதவி பொறியாளா் அரவிந்த், சாலை ஆய்வாளா் வசந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.