தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மூலம் ரேஷன் கடை பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி முகாமுக்கு விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் ராஜசேகா் தலைமை வகித்தாா். உணவு பாதுகாப்பு தரங்கள் மற்றும் அனைத்து உணவு வணிகா்களுக்கும் வழங்கப்படும் பதிவு சான்று ஒழுங்கு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கிளாஸ்டன், மேற்பாா்வையாளா் காா்த்திக், ரேஷன் கடை பணியாளா்கள் பங்கேற்றனா்.