கன்னியாகுமரி

கஞ்சா விற்ற இளைஞா் கைது

Syndication

நாகா்கோவிலில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், தொடா் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு, இருளப்பபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் உதயராஜ் (26), விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 60 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். உதயராஜை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். நிகழாண்டு, இதுவரை 261 கஞ்சா வழக்குகளில் 465 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT