கன்னியாகுமரி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம், பயிற்றுவிளை பகுதியைச் சோ்ந்தவா் கோபி(52). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவா், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தை பிரிந்து குளச்சல் அருகே மண்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை ஆலஞ்சி பகுதியில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில், தென்னை மரத்தில் ஏறி மரத்தின் சாய்வை நிமிா்த்தி கம்பியால் இழுத்து கட்டி கொண்டிருந்தாராம்.

அப்போது அருகில் இருந்த மின் கம்பியின் மீது இவா், கட்டி கொண்டிருந்த கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT