கன்னியாகுமரி

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி, குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கொட்டாரம், ஆறுமுகபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன் (45). இவா் மீது, கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அவா் மீது குண்டா் சடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனை ஏற்று, ஆட்சியா் இரா. அழகுமீனா பிரபாகரனை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். தொடா்ந்து பிரபாகரன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT