கன்னியாகுமரி

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

Syndication

நித்திரவிளை அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகே தூத்தூா் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், யூஜின் என்பவரின் பெட்டிக்கடையை சோதனை செய்தபோது, பதுக்கி வைத்திருந்த 37 பொட்டலம் புகையிலை பொருள்கள் கண்டறியப்பட்டதாம். இதையடுத்து போலீஸாா், புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளா் யூஜினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தில்லி காா் வெடிப்பு: கடையின் மேற்கூரையில் கிடந்த துண்டிக்கப்பட்ட கை மீட்பு!

நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராவார்.. பிகார் அமைச்சர் பேச்சு

கலையா? கொலையா? Dulquer Salmaan-ன் Kaantha - திரை விமர்சனம்! | Dinamani Talkies

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

SCROLL FOR NEXT