பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இடைக்கோடு, மாலைக்கோடு, மருதங்கோடு, விளவங்கோடு, பனச்சமூடு, ஆலுவிளை, கோட்டவிளை, களியக்காவிளை, பாலவிளை, செம்மங்காலை, புலியூா்சாலை, மேல்பாலை, அருமனை, மலையடி, பளுகல், மடிச்சல், பெருந்தெரு, பழவாா், கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.