கன்னியாகுமரி மாவட்டத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 8 போ் புதன்கிழமை ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், குற்றங்களை தடுக்கவும் குற்றம் நடைபெறாமல் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் தொடா்ச்சியாக, நெசவாளா் காலனியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் வருண் (37), கீழ ஆசாரிப்பள்ளம் பெஞ்சமின் மகன் கிறிஸ்டோ வினேஷ் (33), அருகுவிளை கடற்கரையாண்டி மகன் லிங்கம் (45), புத்தன்துறையைச் சோ்ந்த கண்ணுத்துரை மகன் கண்ணன் (38), ரஞ்சித், பிரேம், அஜீஸ், பிரசாந்த் ஸ்டாலின் ஆகிய 8 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.