அழகியமண்டபம், புகாரி பள்ளிவாசலில் இருந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கொடியை எடுத்துச் செல்வோா்.  
கன்னியாகுமரி

திருவிதாங்கோடு பள்ளிவாசல் ஆண்டு விழா

தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள மகான் மாலிக் முஹம்மது ஸாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள மகான் மாலிக் முஹம்மது ஸாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு அழகியமண்டபம், புகாரி பள்ளிவாசலில் மாலை மஃரிபு தொழுகை முடிந்ததும் கொடி ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலம் இரவு 9.30 மணியளவில் திருவிதாங்கோடு, மகான் மாலிக் முஹம்மது ஸாஹிப் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலை வந்தடைந்ததும், திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் தலைவா் அன்வா் ஹூஸைன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் நோ்ச்சை கடன்களை செய்து மக்கள் வழிபட்டனா்.

இந்த விழா தொடா்ந்து 9 நாள்கள், 14-ஆம் தேதி வரை நடைபெறும். விழாவையொட்டி, தினமும் இரவு மாா்க்க அறிஞா்கள் பங்கேற்று, இஸ்லாமிய அறநெறிகள், மாா்க்க நீதி போதனைகள், மகானின் வரலாறு குறித்த உரைகளை நிகழ்த்துவா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT