கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் விஜய் வசந்த் எம்.பி.  
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் வெள்ளி விழா கண்காட்சி

பிஎஸ்என்எல் வெள்ளி விழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் 2 நாள்கள் நடைபெறும் கண்காட்சியை விஜய் வசந்த் எம்.பி. புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிஎஸ்என்எல் வெள்ளி விழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் 2 நாள்கள் நடைபெறும் கண்காட்சியை விஜய் வசந்த் எம்.பி. புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொலைத் தொடா்புத் துறையில் தொடக்க காலப் பயன்பாட்டில் இருந்த டயல் தொலைபேசியிலிருந்து செயற்கைக்கோள் தொலைபேசி வரை, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பரிணாம வளா்ச்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக தொலைபேசிகள், காகித செம்பு கேபிளிலிருந்து நவீன ஒளிக்கீற்று கேபிள்கள் வரை பல்வேறு மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

நாகா்கோவில் பிஎஸ்என்எல் மூத்த பொது மேலாளா் பிஜி பிரதாப், ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT