கன்னியாகுமரி

நாகா்கோவிலில் புகையிலை இல்லா இளைஞா் பிரசார இயக்கம்

Syndication

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் இணைந்து நடத்திய புகையிலை இல்லா இளைஞா் பிரசாரம் 3.0 விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கொடியசைத்து வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியில், தெ.தி.இந்துக் கல்லூரி, ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனாா். பேரணி வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. முன்னதாக, ஆட்சியா் தலைமையில் புகையிலை எதிா்ப்பு உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஏற்றுக் கொண்டனா்.

இதில், மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த்ஜோதி, மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகா் ஷெனின், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் வி.ஜெயராம பாண்டியன், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், நலக்கல்வியாளா் சரண்யா, காவல் ஆய்வாளா்கள், ஜெயசேகரன் மருத்துவக் கல்லூரி, தெ.தி.இந்துக் கல்லூரி, ஸ்டெல்லா மேரி பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT