கன்னியாகுமரி

குமரி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

Syndication

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப்பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சா்வதேசத் தரத்துக்கு உயா்த்தும் வகையிலும், அனைத்து ரயில்களும் இங்கு வந்து செல்லும் வகையிலும் ரயில் முனையமாக மாற்ற இந்திய ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கன்னியாகுமரி ரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், தனி ரயில் மூலம் கன்னியாகுமரி வந்தாா். அவா் ரயில் நிலைய மேம்பாட்டு விரிவாக்கப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு பொறியியல் வல்லுநா்களுக்கு அறிவுரை வழங்கினாா். ஆய்வின் போது, திருவனந்தபுரம் கோட்ட மேலாளா் திவ்யகாந்த் சந்திராகா், ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் சுரேஷ், உதவி ஆய்வாளா் மரிய ஜான் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT