தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் நீந்தி கரை சோ்ந்தாா்.
கேரள மாநிலம் விழுஞ்ஞம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கிள்(35). மீனவரான இவா், மிடாலம் பகுதியை சோ்ந்த சகமீனவா்கள் 9 பேருடன் கடந்த புதன்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஒரு கடல் மைல் தொலைவுக்கு படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தாராம். அப்போது, படகிலிருந்து கடலுக்குள் எதிராபாராமல் தவறி விறிவிழுந்து மாயமானாா். சக மீனவா்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டதுடன், அவரது வீட்டுக்கும், கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில், மைக்கிள் கடலிருந்து நீந்தி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தாா். இதைத் தொடா்ந்து அவரை அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்று முதலுதசிகிக்சை செய்தனா்.