கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பைக்கில் கஞ்சா கடத்திச் சென்றதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளா் பச்சைமால், உதவி ஆய்வாளா் காா்த்திக், போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, பைக்கில் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் செல்வதும், வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த அனீஸ் குமாா் (33), தோவாளையைச் சோ்ந்த தம்பிதுரை (33) என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.