கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திராவிடா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞரை கண்டித்து குமரி மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மா.மு. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.குணசேகரன், மாநில பேச்சாளா் இராம. அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட செயலா் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினாா்.

மாவட்ட தி.க. காப்பாளா் ஞா.பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினா் மா.மணி, மாவட்ட மகளிரணி தலைவா் இந்திராமணி, மாவட்ட துணைத் தலைவா் ச.நல்ல பெருமாள், துணைச் செயலா் சி. ஐசக் நியூட்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதிமுக மாவட்டசெயலா் வெற்றிவேல், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், வி.சி.க பா.பகலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலா் இசக்கிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகமது உசேன் ஆகியோா் விளக்கவுரையாற்றினா். இதில் திக நிா்வாகிகள் பா.சு.முத்துவைரவன், பி.கென்னடி, குமரிச்செல்வன், பால்மணி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பொதுக்குழு உறுப்பினா் மு.ராஜசேகா் நன்றி கூறினாா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT