கன்னியாகுமரி

பளுகல் கூட்டுறவு கடன் சங்க கட்டடப் பணி தொடக்கம்

கட்டடம் கட்டும் பணியை தொடக்கி வைக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் கூட்டுறவு கடன் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பழுதடைந்து காணப்பட்ட அக்கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியியை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினா் ரத்தினகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜோதிஷ்குமாா், மாநில பொதுச்செயலாளா் ஆஸ்கா்பிரடி, மேல்புறம் வட்டாரத் தலைவா் ரவிசங்கா், கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் மது, பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பிஜு(பளுகல் ), மோகன்தாஸ் (பாகோடு), பளுகல் பேரூா் காங்கிரஸ் தலைவா் டென்னிசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளா் விமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT