கன்னியாகுமரி

தலைமறைவான 2 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்பாக நீண்ட நாள்களாக ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள 2 இளைஞா்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை , சிறியவண்ணான்விளை பகுதியைச் சோ்ந்த ரீகன்(27), கேரள மாநிலம் கைத்தோடு பகுதியைச் சோ்ந்த ஷபீக்(35) ஆகிய இருவா் மீதும் புதுக்கடை காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

வழக்கு தொடா்பாக நீண்ட நாள்களாக குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2 பேரும் தலைமறைவாக உள்ளனராம். இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்ய போலீஸாருக்கு குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT