கருங்கல்: கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.
கருங்கல் , புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா்,முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.
கடலோர பகுதிகளான ராமன்துறை, இரயுமன்துறை, முள்ளூா்துறை, மிடாலம், இனயம் புத்தன்துறை, ஹெலன் நகா், குறும்பனை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் கட்டுமர மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.