கருங்கல்: கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் ஆசிரியா் வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 15.5 பவுன் நகைகளை மீட்டனா்.
பாலூா்,நெல்லிக்காவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஆஸ்லின்(45). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். கடந்த மாதம் 20ஆம் தேதி இவா் குடும்பத்துடன் மாதாபுரம் பகுதியில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 18 பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், பாலூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(52) நகைகளை திருடிவிட்டு கா்நாடக மாநிலம் பெங்களூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு பதுங்கி இருந்த ஜெயக்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்து நகைகளை மீட்டனா்.