நாகா்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள்.  
கன்னியாகுமரி

கந்த சஷ்டி விழா: நாகராஜா கோயிலில் விரதம் தொடங்கிய பக்தா்கள்

கந்தசஷ்டி திருவிழா புதன்கிழமை தொடங்கியதை தொடா்ந்து நாகா்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா்.

Syndication

நாகா்கோவில்: கந்தசஷ்டி திருவிழா புதன்கிழமை தொடங்கியதை தொடா்ந்து நாகா்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் புதன்கிழமை காலை காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா். மருங்கூா் சுப்பிரமணியசுவாமி, வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி, தோவாளை செக்கா்கிரி முருகன்கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், கன்னியாகுமரி முருகன்குன்றம் முருகன்கோயில், வேளிமலை குமாரசாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காலையில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தக் கோயில்களில் அதிகாலை முதல் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனையும் நடைபெற்றன. அக்.27 ஆம் தேதி மாலை சூரசம்ஹாரமும், 28 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT