முதலாம் ஆண்டு விழாவில் உரையாற்றுகிறாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். 
கன்னியாகுமரி

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா

நாகா்கோவில் அருகே சுங்கான்கடையில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

Syndication

தக்கலை: நாகா்கோவில் அருகே சுங்கான்கடையில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கிம்ஸ் ஹெல்த் குழுமத் தலைவா் எம்.ஐ. சஹதுல்லா தலைமை வகித்தாா். பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். இதில், நடிகை ஐஸ்வா்யா லட்சுமி, குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் மகேஷ், வில்லுக்குறி பேரூராட்சி தலைவா் விஜயலெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மருத்துவமனையில் 35-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகளில், 75-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், சேவையாற்றி வருகின்றனா். ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா்.

புற்றுநோய் சிகிச்சைக்கான கதிா்வீச்சு லினாக் யூனிட், இதயம், நரம்பு தொடா்பான சிகிச்சைக்கான கேத் லேப், மாா்பக புற்று நோயை கண்டுபிடிக்கும் மாமோகிராம் கருவி, உறுப்பு மாற்று சிகிச்சைக்கான புதிய நவீன மருத்துவக் கருவிகளை நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனா்.

மருத்துவமனையின் சமூக திட்டத்தின் கீழ் 8 பேருக்கு இலவசமாக செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. முன்னதாக நிா்வாக இயக்குநா் நஜீப் வரவேற்றாா். மருத்துவக் கண்காணிப்பாளா் தாணு சுப்பிரமணியம் நன்றி கூறினாா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT