கருங்கல்: கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் குளத்தின் கரையில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கினாவிளை ஊராட்சியில் நீா்வளத்துறைக்கு சொந்தமான சட்டி குளம், கொக்குறுணி குளம், பெருஞ்சிறை குளம், பப்புரான் குளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. சில தனியாரால் இந்த குளத்தின் கரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பப்புரான் குளக் கரையில் நீரோடையின் மேல் பகுதியில் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனா். இதனால், மழை காலங்களில் மழைநீா் குளத்திற்கு செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.