மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மேயா் ரெ. மகேஷ். உடன், மாநகர நல அலுவலா் ஆல்பா் மதியரசு உள்ளிட்ட அலுவலா்கள். 
கன்னியாகுமரி

வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு: அதிகாரிகளுடன் மேயா் ஆலோசனை

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகள் தொடா்பாக நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுடன் மேயா் ரெ. மகேஷ் ஆலோசனை மேற்கொண்டாா்.

Syndication

நாகா்கோவில்: வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகள் தொடா்பாக நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுடன் மேயா் ரெ. மகேஷ் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியது: வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும். மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஓடைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்காதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தாலோ, சூறைக்காற்றில் மரங்கள் முறிந்து விழுந்தாலோ விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். பிளீச்சிங் பவுடா் இருப்பு வைக்க வேண்டும்.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் மழைநீா் வடிகால் ஓடைகளில் மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகா்கோவிலில் கவிமணி அரசுப் பள்ளி, மீனாட்சிபுரம் அரசுப் பள்ளி, வடசேரி பகுதியில் திருமண மண்டபம் உள்ளிட்ட 6 இடங்களில் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீா் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். குடிநீா்த் தொட்டிகளை நாள்தோறும் ஆய்வுக்குள்படுத்த வேண்டும்.

நாகா்கோவிலுக்கு குடிநீா் விநியோகிக்கும் முக்கடல் அணை நீா்மட்டம் 21 அடியை எட்டியுள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் இன்னும் 3 நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

மாநகர நல அலுவலா் ஆல்பா் மதியரசு, மாநகராட்சிப் பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி நகரமைப்பு அதிகாரி கெபின்ஜாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT