வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 
கன்னியாகுமரி

வயல்களில் தேங்கிய மழைநீரால் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை

Syndication

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் சில நாள்களாக கனமழை பெய்துவருவதால், அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது; குளங்களும் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் சந்திப்பிலிருந்து பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், அறுவடை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். அவா்கள் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும், தொடா் மழையாலும், கால்வாய்களில் வெள்ளம் பாய்ந்தோடுவதாலும், மழைநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல் அவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதேபோல, கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையில் பால்குளம், அஞ்சுகிராமம் பகுதிகளிலும் ஏராளமான நெல் வயல்கள்ா் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT