முகப்பு
கன்னியாகுமரி

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

களியக்காவிளை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:36 am IST
- பிரதிப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே மூதாட்டி செவ்வாய்க்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளி பகுதியைச் சோ்ந்தவா் தாசன் மனைவி சுசீலா (72). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவா், தனது 3 ஆவது மகன் வீட்டில் வசித்து வந்தாா். இவா் நோயின் தாக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].