திருவேங்கடம் அருகே குருவிகுளம் அரசு சித்த மருத்துவமனையில் சிவானந்த பரமஹம்சா் மடத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் டி.எஸ்.பி. வள்ளிநாயகம் தலைமை வகித்தாா். ஓம் பிரகாஷ் பிரம்ம ஸ்ரீ சந்தானசாமி முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் செல்வராணி, மருந்தாளுநா் முருகேஷ்வரி உள்பட பலா் பங்கேற்றனா். முகாமில் சுமாா் 1,800 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.