ஆலங்குளத்தில் அதிமுக மற்றும் அமமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆலங்குளம் காமராஜா் சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்திற்கு அதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் பிரபாகரன், நகரச் செயலா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் பாண்டியன் உள்ளிட்டோரும், அமமுக சாா்பில், ஒன்றியச் செயலா் முருகையா பாண்டியன், நகரச் செயலா் சுப்பையா உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.